சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் - விமல் வீரவங்ச
சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். லங்காதீப பத்திரிகைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளதாவது,
சரத் பொன்சேகா கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் முதல் 24 மணித்தியாலங்களுக்குள் கொலை செய்யப்படவுள்ள நபர்களின் பட்டியலில் எனது பெயரும் இருந்தது. அந்த கதை எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி இந்த நபரை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
இவ்வாறு நான் குறிப்பிடுவது சரத் பொன்சேகா மீது எனக்குள்ள அன்பினால் அல்ல . சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்று கூக்குரலிடுபவர்கள்தான் அவர் உள்ளே இருக்க வேண்டும் என்று அதிகம் விரும்புகிறார்கள். அவர்கள் பொய்யாகவே விடுதலை செய்யுமாறு கோருகிறார்கள். சரத் பொன்சேகாவின் பாரியாருக்கு உண்மையில் தேவை இருந்தால் தனது கணவரின் விருப்பம் இன்றி கூட ஜனாதிபதியிடம் கணவரை விடுதலை செய்யுமாறு கேட்க முடியும் . ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்டால் மாத்திரமா பொது மன்னிப்பு கிடைக்கும் ? என்று எவரேனும் வாதம் புரிய முடியும் . ஆம்! அதுதான் உண்மை.
எல்லா கைதிகளும் விடுதலை பெறவே விரும்புவார்கள் . அதுபோல் கைதிகளின் உறவினர்களும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுகிறார்கள் . அப்படியானால் சரத் பொன்சேகாவின் பாரியார் அவ்வாறு கேட்காதது ஏன்?
ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னொரு எதிரி உருவாவார். டிரான் அலஸும் அவர்களுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கிடைத்த பணம் தொடர்பாக பிரச்சினை எழும். ஜே.வி.பியுடன் எப்படியும் பிரச்சினையை ஏற்படுத்தி கொள்வார்கள். இவை எல்லாம் நடக்க சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் . அவர் உள்ளே இருக்கும் வரை இவை எவையும் நடைபெறாது. அப்படியாயின் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே சிறந்த பதிலாகும்.
விமல் வீரவன்சவின் மேற்படி கருத்து தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த முன்னாள் ராணுவத் தளபதி விமல்வீரவன்ச தனது கொலைப்பட்டியலில் இருந்தார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கொமடி எனத் தெரிவித்துள்ளார். நேற்று வைத்தியசிகிச்சைக்காக பிரத்தியேக வைத்தியசாலை ஒன்றுக்கு வந்திருந்த அவர் தொடர்ந்து கூறுகையில், தனது கொலைப்பட்டியலில் புலிகளே இருந்ததாகவும், இவர் போன்ற சாரைப்பாம்புகள் இருக்கவில்லை எனவும் தான் சாரைப்பாம்புகளை கொன்று பாவம் தேடிக்கொள்பவன் அல்ல எனவும், விசப்பாம்புகளையே தேடி அழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment