Friday, January 6, 2012

சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் மகனின் நிதி உதவியுடன் கிளிநொச்சியில் முதியோர் இல்லம்.

எல்ரிரிஈ பயங்கரவாதம் காரணமாக, இடம்பெயர்ந்த முதியோர்களுக்கு, சகல வசதிகளும் கொண்ட 50 அறைகள் அடங்கிய முதியோர் இல்லமொன்று, கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி, அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த முதியோர் இல்லத்தை, அமைச்சர் ரி.பி. ஏகநாயக்க திறந்து வைத்தார்.

பயங்கரவாதம் காரணமாக, இந்த முதியோர், பிள்ளைகளையும், உறவினர்களையும், தமது சொத்துகளையும் இழந்துவிட்டனர். இக்கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கென, 300 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் சுப்ரமணியம் கதிர்காமநாதனின் நிதி உதவியுடன், சகல வசதிகளும் கொண்டதாக, இந்த முதியோர் இல்லம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கான காணியை, அரசங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக, மேலும் 50 அறைகள் கொண்ட கட்டிடம் நிர்மாணிக்கப்படும். அப்பகுதியில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மக்கள், இது தொடர்பான வைபவத்தில் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com