மாணவர் அனுமதியின்போது இடம்பெறும் முறைகேடுகள் குறித்து ஆராய விசேட குழு
மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுமதிக்கும் போது இடம்பெறும் குளறுபடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் 11 பேர் அடங்குவதாகவும், ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இக் குழு செயற்படும் எனவும் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மாணவர்களைப் பாடசாலைக்கு சேர்க்கும்போது பிரச்சினைகள் ஏற்படுமாயின் அது குறித்து எழுத்து மூலம் தமக்கு அறிவிக்குமாறு மேல்மாகாண முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுமதிக்கும்போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் ஊழல்கள் தொடர்பிலும் நிர்வாகப் பிரச்சினைகள் தொடர்பிலும் விசாரணைக்குழு ஆராயவுள்ளது.
மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் பலவற்றில் மாணவர்களை சேர்கும் போது, அனுமதிக்கப்பட்ட கட்டணங்களுக்கு மேலதிகமாக அன்பளிப்பு மற்றும் நன்கொடை என்ற பெயரில் பெருந்தொகை பணம் மற்றும் பொருட்கள் அறவிடப்படுவதாக நீண்ட காலமாகவே சுட்டிக்காட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment