சாரதிகளின் குற்றச் செயல்களை கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
வாகனங்களை செலுத்துவோரினால் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, விரிவான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாரதிகள் மற்றும் வாகன இலக்கங்களை இனங்காண்பதற்காக, சி.சி.ரி.வி. கெமராவின் உதவி பெறப்படவுள்ளது. புதிய வேலைத்திட்டத்திற்கு ஏற்றவாறு, சி.சி.ரி.வி. கெமரா தொகுதியை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கிறார்.
தற்போது செயற்படும் சி.சி.ரி.வி. கெமராக்களுக்கு மேலதிகமாக, ஒட்டோமேடட் நம்பர்பிளேட் ஐடன்டிவிகேசன் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் தவறிழைக்கும் வாகனஙகளின் இலக்க தகடுகளை தன்னியக்கமாக இனங்காண, வசதிகள் ஏற்படுகின்றன.
இதற்கு மேலதிமாக ஒட்டோமேடட் பேசர் சிஸ்டம் என்ற தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் குறித்த நபரை அடையாளப்படுத்திக்கொள்ளவும், முடியும். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வாகனங்களினால் மேற்கொள்ளப்படும் தவறுகளை இனங்காணப்படவுள்ளன. அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, இந்த புதிய தொழில்நுட்ப திட்டத்தின் மூலம் முடியும்.
0 comments :
Post a Comment