Tuesday, January 3, 2012

வீடு கேட்டு பிரதேச செயலாளரின் அலுவலகத்தினுள் புகுந்த மருதமுனை மக்கள்.

சுனாமியால் பாதிக்கப்பட்டு 7வருடங்களாகியும் தமக்கான வீடுகள் வழங்கப்பட்டவில்லை யென்பதைக்கண்டித்து மருதமுனை பிரதேச மக்கள் கல்முனைப்பிரதேச செயலகத்தை நேற்றைய தினம் முற்றுகையிட்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மருதமுனை மேட்டுவட்டைப்பகுதியில் 178 வீடுகள் இதுவரையில் அமைக்கப்பட்டுள்ளபோதும் இவை இன்னமும் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை.

சுனாமி தாக்கம் ஏற்பட்டு 7 வருடங்கள் கடந்த நிலையிலும் இம்மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் இவர்களுக்கு கையளிக்கப்படாததைத் தொடர்ந்து, கடந்த மாதம் இம்மக்கள் அவ்வீடுகளில் அத்துமீறி குடியேறினார்கள். ஆயினும் பிள்ளைகளுடனும் பெண்களுடனும் உள்ள இவர்களுக்கு அவ்வீடுகள் எந்த விதமான வசதிகளுமின்றி காண்படுவதால் இவர்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவ்வீடுகளை தமக்கு உரிய வகையில் கையளிக்க வேண்டும் என்பதோடு அதற்குரிய வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறியே இவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இவர்களது இப்போராட்டம் காரணமாக கல்முனைப்பிரதேச செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சிலலை அம்பாரை அரச அதிபரைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment