Friday, January 6, 2012

முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனை மக்களை கைவிட்டு விட்டது. A.R.அமீர்.

சுனாமி அனர்த்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இன்றுவரை எவ்விததீர்வுகளும் இல்லாமல் மிகவும் கஷ்டப்படும் மருதமுனை 65 மீற்றருக்குட்பட்ட மக்களினதும் சாய்ந்தமருது பிரதே மக்களினதும் வீடில்லாப் பிரச்சினைக்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எந்தவித தீர்வுகளையும் இதுவரை பெற்றுக்கொடுக்காமல் மௌனமாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்து கல்முனை மாநகரசபையின் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, சுனாமி அணர்த்தம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகள் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் ஏனைய பிரதிநிதிகளும், அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் சமுகத்தின் தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்காகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் உருவாக்கினார்.

முஸ்லிம் சமுகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே 1994ம் ஆண்டு சந்திரிக்கா அஷ்ரப் ஒப்பந்ததுடன் அப்போதைய அரசை ஆதரித்து சமுகத்திற்காக பெரும் அபிவிருத்திகளையும் நலன்களையும் சாதுரியமாக நிறைவேற்றிக்காட்டினார்.

ஆனால் இன்று முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளியாக அரசுடன் இணைந்தும் மக்களுக்கான நோக்கத்தை நிறைவுசெய்யாது வெறுமனே பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாணசபை உறுப்பினர்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காகவே செயற்;பட்டுக் கொன்டிருக்கிறது.

சுனாமி அனர்த்தத்தினால் அதிகமான உயிர்களையும் உடமைகளையும் இழந்த பிரதேசம் கல்முனைப பிரதேசமாகும். மக்களின் வேதனைகளைக் கருத்திக்கொன்டாவது அரசுடன் நெருக்கமான நல்லுறவைப்பேணியும் மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுத்தராமல் வெறுமனே தூதுவர்களை சந்தித்து ஊடகங்களில் பிரபல்யத்தை பெறுவதால் எமது மக்கள் அடைந்த நன்மை இதுவரையில் ஏதுவும் இல்லை...

ஆகவே எமது மக்களின் நன்மையை கருத்திக் கொன்டு கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும், பிரதிநிதிகளும், மாகாண அமைச்சர்களும் தங்களது பிரதேச மக்களிற்கு செய்து வருகின்ற வேலைதிட்டங்களில் சிறுவிகிதத்தையாவது கல்முனைப் பிரதேசத்தில் குறிப்பாக மருதமுனை மற்றும் சாய்ந்தமருதுப் பிரதேசங்களில் பாதிக்கப்பட்டு இல்லறம்மின்றி வாடும் குடும்பங்களுக்கு உதவ முன்வரவேன்டும் என அறிக்கையில் தெறிவிக்கப்படிருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com