Wednesday, January 11, 2012

இந்திய எல்லையினுள் நுழைந்து மீன்பிடித்த நம் மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடிப்பு

நாகை கடல் எல்லையில், இரண்டு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் பிடித்தனர். இந்திய கடலோர பாதுகாப்பு படையின், விஷ்பஸ்த் வில்ஸ்ட் கப்பல், நேற்றுமுன்தினம் ஆந்திர கடல் எல்லையில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, நாகப்பட்டினம் அருகில், 57 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இரண்டு மீன் பிடிப் படகுகளை பிடித்து, அதில் இருந்த, 1,000 கிலோ மீன்களை பறிமுதல் செய்தது.

இரண்டு படகுகளிலும் இருந்த, ஒன்பது இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில், ஜி.பி.ஆர்.எஸ்., வசதி, ரேடார், அதி தொலைவு உயர் அலைவரிசை தொடர்பு சாதனங்கள் இருந்தன.

இந்த ஆண்டில், இது முதல் நடவடிக்கையாகும். கடந்தாண்டில், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த, 173 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 34 படகுகள் கைப்பற்றப்பட்டன. இந்திய கடல் பகுதியில் அத்துமீறும் வெளிநாட்டவரை, கடல் மற்றும் வான் மார்க்கத்தில் கடலோர காவல்படையினர் கண்காணித்து வருகின்றனர். மீனவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளும், உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com