Tuesday, January 10, 2012

வைத்தியரைத் தாக்கிய கடற்படையினர் 8 பேருக்கு விளக்க மறியல் உத்தரவு.

வைத்தியதிகாரியை தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் கடற்படையினர் எட்டு பேரை கைது செய்த திருமலைப்பொலிஸார் அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, சந்தேகக நபர்களான கடற்படையினரை எதிர் வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான் எஸ். சதீஸ்தரன் உத்தரவு பிறப்பித்தார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை இராணுவ வீரர்கள் திருகோணமலை திஸ்ஸ கடற்படை இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களாகும்.

சட்டவிரோதமாக அரச கடமைக்கு இடையூறு விளைத்ததாக இவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

சுந்தேக நபர்களை கைது செய்யச் சென்ற திருமலை துறைமுகப் பொலிஸார் மீதும் அவர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com