Wednesday, January 18, 2012

ஊழியர் சேமலாப நிதிச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 71 வாக்குகள்

ஊழியர் சேமலாப நிதிச் சட்ட மூல ஆவணம் இன்று பாராளுமன்றில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சபைக்கு சமர்பிக்கப்பட்டு அதன் மீதான விவாதம் இடம்பெற்றது ஏற்கனவே எதிர்கட்சிகளின் எதிர்ப்பை பெற்ற இச்சட்ட மூல ஆவணம் இரு திருத்தங்கள் செய்யப்பட்டு இன்று பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது இச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 71 வாக்குகளும்,எதிராக 12 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படவிருந்த மூன்று சட்ட மூலங்களான சேவையாளர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு லாப நிதிய சட்டமூலம், வெளிநாட்டு சேவையாளர்களின் ஓய்வூதிய லாப நிதிய சட்ட மூலம், என்பனவே விலக்கிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த தகவலை, சபைத்தலைவர் நிமால் சிரிபால டி சில்வா வெளியிட்டுள்ளார்.


No comments:

Post a Comment