வடபகுதி சேர்ந்த 6 ஆயிரம் பேருக்கு அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் தொழில் வாய்ப்பு
வடபகுதியைச் சேர்ந்த 6 ஆயிரம் பேருக்கு அச்சுவேலிக்கைத்தொழில் பேட்டையில் முதற்கட்டமாக தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. முதல் கட்டமாக 25 ஏக்கர் நிலப்பரப்பில்அமைக்கப்படும் இக்கைத்தொழிற்பேட்டையில் பல்வேறு உற்பத்திகள் சேவைகளை வழங்கும் 40 கைத்தொழிற்சாலைகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன
இக்கைத்தொழில் பேட்டையின் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் 67 ஏக்கர் நிலப்பரப்பு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் கைத்தொழில்கள் மற்றும் வணிக சபை தெரிவித்துள்ளது
இக்கைத் தொழில் பேட்டைக்கு அருகில் பலாலி விமான நிலையம் காங்கேசன் துறை முகம் என்பன உள்ளமை சிறப்பாக உள்ளது. நீண்டகாலமாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு இதன் மூலம் அதிக பயன்கள் கிடைக்கவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment