அக்பர் கிராமத்தில் கல்முனைக் கல்வி வலயத்தின் 63 வது பாடசாலை திறப்புவிழா.
கல்முனை கல்வி வலயத்தின் 63வது பாடசாலையாக அக்பர் வித்தியாலயம் கடந்த திங்கட்கிழமை 09ம் திகதி மாலை பெரியநீலாவணை அக்பர் கிராமத்தில் மிகக்கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது. அக்பர் கிராம மக்களின் நீண்டகாலக்கனவு இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இந்தக்கிராமத்து மாணவர்கள் தூரப் பாடசாலைகளுக்குச் சென்றே தங்களது கல்வியை மேற்கொண்டு வந்தனர் ஆரம்பப்பிரிவில் கற்றுவந்த மாணவர்கள் பல சிரமங்களை எதிர் கொண்டனர் இதனால் ஆரம்பப்பாடசாலை ஒன்றின் அவசியம் பற்றி எல்லோராலும் உணரப்பட்டது இந்த விடயம் அக்பர் கிராம மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆப்பள்ளிவாசல் நிருவாகத்தினரால் கவனத்தில் எடுக்கப்பட்டது அதன் பின்னர் பள்ளிவாசல் நிருவாகத்தினர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல் துல்கர் நயீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
துல்கர் நயீம் எடுத்த துரித முயற்சியின் பயனாக ஒரு மாதத்திற்குள் இந்தப்பாடசாலை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தற்போததையத் தலைவர் ஐ.எல்.எம்.பாறூக் ஆகியோர் முன்னிலையில் அவர்களின் வழிகாட்டலில் இந்த விழா மிகவும் கோலாகலமாக நிறைவு பெற்றது
பிரதம அதிதியாக கிழக்கு மாகாணகல்வி அமைச்சர் விமல வீர திசாநாயக்க கலந்துகொண்டு பாடசாலையை திறந்து வைத்தார். கௌரவ அதிதியாக கிழக்குமாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை கலந்து கொண்டு நினைவுக்கல்லை திரைநீக்கி வைத்தார். சிறப்பு அதிதியாக கிழக்குமாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றசாக் (ஜவாத்) கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல், கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக்,பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம், உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் அக்பர் கிராம முஸ்லிம் விவாகப்பதிவாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை சட்டத்தரணி எப்.எம்.ஏ.அன்சார் மௌலானா, சத்தார் எம்.பிர்தௌஸ், அக்பர் பள்ளிவாசல் நிருவாகிகள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் அக்பர் கிராமத்திற்காக தன்னை அர்ப்பணித்த வை.எல்.அன்சாருக்கு அதிதிகள் வாழ்த்துப்பத்திரம், நினைவுச்சின்னம் என்பன வழங்கி கௌரவித்தனர். அதிபர் ஜிப்ரியின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது பிறை எப்.எம்.பஷர் அப்துல்கையூம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
(பி.எம்.எம்.ஏ.காதர்)
0 comments :
Post a Comment