கல்முனை கல்வி வலயத்தின் 63 வது பாடசாலையாக அக்பர் வித்தியாலயம் ஆரம்பம்
கல்முனை கல்வி வலயத்தின் 63 வது பாடசாலையாக பெரியநீலாவனை அக்பர் கிராமத்தில் அக்பர் வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ அரம்ப விழா நாளை திங்கள் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பெரியநீலாவனை மால் ஜிதுல் அக்பர்ஜிம் ஆ பள்ளியின் ஏற்பாட்டில் வை. எல். எம். அன்சார் , ஜ.எல்.எம் பானுக் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஏல் துல்கர் நயீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விமலவீர திஸநாயக்க கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
0 comments :
Post a Comment