Sunday, January 8, 2012

இணையத்தளங்களை பதிவு செய்வதற்காக 62 விண்ணப்பங்கள் - ஊடக அமைச்சின் செயலாளர்

இலங்கை தொடர்பிலும் இலங்கை மக்கள் தொடர்பிலும் செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் அனைத்தும் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறையின் கீழ் 62 இணையத்தளங்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் கனேகல தெரிவித்துள்ளார்.

எனினும் 18 இணையத்தளங்கள் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சு இதுவரை எந்தவித தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனவும், இந்த இணையத்தளங்கள் தொடர்பில் தகவல்களை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்படாத 41 இணையத்தளங்கள், உள்ளதாகவும் அவை தங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் உள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com