600 மில்லியன் வேலைத் தேவை - சர்வதேச தொழிலாளர் ஆணையம்!
அடுத்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ 600 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மூன்றில் ஒரு தொழிலாளி அல்லது உலக மக்கள் தொகையில் 110 கோடி வேலையில்லாமல் அல்லது வேலையிருந்தும் வறுமையில் வாடுவதாக தொழிலாளர் ஆணையத்தின் இயக்குனர் ஜூவான் சொமாவியா தெரிவித்துள்ளார். ”வேலைவாய்ப்பினை உருவாக்குவதுதான் உலக நாடுகளின் முன்னுள்ள தலையாய பணி” எனத் தெரிவித்துள்ள சொமாவியா, இதனை அரசாங்கங்கள் எடுக்கும் நல்ல கொள்கைகள் மூலம்தான் நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
யூரோ கடன் பிரச்னைகள் விரைவில் சுமுகமாகத் தீர்க்கப்பட்டாலும் 2016 ஆம் ஆண்டு வரை உலகத்தில் வேலைவாய்ப்பின்மை மதிப்பீடு 6 சதவிகிதமாக இருக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு 15 முதல் 24 வயது வரையுள்ள ஏறத்தாழ 75 மில்லியன் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருந்ததாக சர்வதேச தொழிலாளர் ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment