Friday, January 27, 2012

வடமேல் மாகாணத்தில் 600 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்.

வடமேல் மாகாணத்தில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் போட்டிப் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற 600 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளநர் திஸ்ஸ ஆர். பலல்ல மற்றும் வடமேல் மாகாண விவசாய அமைச்ச டி. பீ. ஹேரத் , அமைச்சர் அதுல விஜேசிங்க , மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹார் ஆகியோர் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாககக் கலந்து கொண்ட வடமேல் மாகாண முதல் அமைச்சர் அதுல விஜேசிங்க அங்கு உரையாற்றுகையில், 'ஜனாபதியின் கல்வித் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் வடமேல் மாகாணத்திலுள்ள 600 பட்டதாரிகளுக்கான நியமனம் போட்டிப் பரீட்சையின் மூலமாகத் தெரிவு செய்யப்பட்டவையாகும். இதில் எந்த விதமான அரசியல் கலப்பும் தலையீடுமில்லாத ஒரு சுதந்திரமான நியமனம். இவர்கள் மூலம் எதிர்காலச் சந்ததியினரின் கல்வியல் வாழ்வுக்கு ஒளி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அத்துடன் இன்னும் ஒரு மாதத்தில் 500 பட்டதாரிகள் அந்தப் பரீட்சைப் பெறுபேற்றிலிருந்து இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் வடமேல் மாகாணம் ஏனைய மாகாணங்களை விட கல்வித்துறையில் முன்னணியில் திகழ்வதற்கு பெரும் வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.

இப்பட்டதாரிகள் நியமனம் குருநாகல் மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களுக்கும் புத்தளம் மாவட்டத்திலுள்ள இரு கல்வி வலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 600 பட்டதாரி ஆசிரியர்களுள் 58 தமிழ் மொழி மூலப் பட்டதாரி ஆசிரியர்கள் இவ் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



No comments:

Post a Comment