Sunday, January 29, 2012

தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம்: பிரித்தானியாவில் 5 பத்திரிகையாளர்கள் கைது

பிரிட்டனின் புகழ்பெற்ற, 'நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை , அரசியல்வாதிகளின் முக்கிய தகவல்கள் உள்ளிட்டபல்வேறு விவகாரங்களை தொலைபேசி வாயிலாக ஒட்டு கேட்டதாக புகார் எழந்தது. இது நாடு முழவதும் பரபரப்பினை ஏற்படுத்தின. மேலும் இளவரசர் வில்லியமின் உதவியாளரில் இருந்து, முக்கிய அரசியல்வாதிகள் வரை அனைவரது தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்ட விவகாரத்தில் சிக்கியது.

பிரிட்டனை பரபரப்பிற்குள்ளாகிய மேற்படி தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் , மேலும் 5 பத்திரிகையாளர்களை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பிட்ட பத்திரிகை மீது, பார்லிமென்டில் எம்.பி.,க்கள் கடுமையாகக் குற்றம் சாட்டினர். இதையடுத்து, பத்திரிகையின் அதிபர் ரூபர்ட் முர்டோக், கடந்த ஆண்டு (2011)ஜூலை மாதம் தனது பத்திரிகையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இப்பிரச்சனை பூதாகரமாக வெடிக்கவே , 168 ஆண்டு காலப் பெருமை உடைய, 'நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை, இழுத்து மூடப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 'ஆப்பரேசன் ஈலிவ்டன்' என்ற பெயரில் ஸ்காட்லாந்துயார்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று, முர்டோக் குழுமத்தின் 'சன்' என்ற பத்திரிகையில் பணியாற்றிய செய்தி ஆசிரியர்கள் மற்றும் நிருபர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து முக்கிய தகவல்களை பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்படுள்ளது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்தனர்.

இந்தகைது விவகாரம் குறித்து நியூஸ் கார்ப்பரேசனின் நிர்வாக நிலைக்குழு (எம்.எஸ்.சி) கூறுகையில், ஸ்காட்லாந்து யார்டு போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம், பொதுநலனுக்கான நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம் என செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளது.

இக்குற்றச்சாட்டின் கீழ், லண்டன் மாநகர போலீஸ் கமிஷனர் பால் ஸ்டீபன்சன், பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான காரணத்தில், 'நியூஸ் இன்டர்நேஷனல் மூத்த அதிகாரிகளுடன் மாநகர போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த யூகம் மற்றும் குற்றச்சாட்டின் கீழ் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.இன்றைய கைதுடன் 14 பேர் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். முன்னதாக இந்த பத்திரிகை ஆபீசில் போலீசார் ரெய்டு நடத்தினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment