சட்டவிரோத மின்சாரம் பெற்ற 52 பேர் வடமராட்சியில் சிக்கினர்.
இலங்கை மின்சார சபையின் கொழும்பிலிருந்து வந்த விசேட குழவினர் வடமராட்சி பிரதேசத்தில் நேற்றும் நேற்றும் இன்று அதிகாலையும் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமானமின்சாரம் பெற்ற 52 பேரை கைது செய்துள்ளனர்.
யாழ்.வந்த இக்குழவினர் நெல்லியடிப்பொலிஸாருடன் இணைந்து வடமராட்சியின் கரவெட்டி நெல்லியடி வதிரி பகுதிகளில் இவ்வேட்டையில் ஈடுபட்டனர்.
இதன்போது சட்டவிரோதமான மின்சாரம் பெற்ற வர்களில் நேற்றைய தினம் 31 பேரும் இன்றைய தினம் 21 பேரும் பிடிக்கப்பட்டனர்
இவ்வாறு பிடிக்கப்பட்டவர்கள் எதிர்வரு; 3ம் திகதி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுவதற்கு பயன்படுத்ததிய வயர்கள் கம்பிகள் உள்ளிட்ட உபகரணங்களும் பொலிஸரால் பறிமுதல் செய்யப்பட்டனர்.
இதேவேளை கடந்த வருடமும் இவ்வாறு சட்டவிரோதமான மின்சாரத்தை பெற்ற நூற்றுக்கணக்கானவர்கள் வடமராட்சியில்; பிடிக்கப்பட்டு பல லட்சம் பெறுமியான தண்டப்பணம் வசூலிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment