Sunday, January 29, 2012

கடலோர பாதுகாப்புக்கென 500 மில்லியன் நிதியொதுக்கீடு

கடலோர பாதுகாப்புக்கு 500 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. கடலோர பாதுகாப்பை பலப்படுத்தவும் கடலரிப்பை தடுக்கவும் மேற்படி நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இதன்மூலம் நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு கரையோர பகுதிகளில் 10 கடற்கரை பூங்காக்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தென் மாகாணம்,வடக்கு, கொழும்பு மற்றும் மாத்தறை நகரிலும் மட்டக்குளி காக்கை தீவிலும் மேற்படி பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.

கடலரிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளிலுள்ள கடற்கரைகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவுமென நம்பப்படுகிறது.

கொழும்பு நகர், இரத்மலானை, வத்தளை- உஸ்வெட்டக்கொய்யாவ, பிரித்திபுர, வெடிகண்டி, நீர்கொழும்பு - போருத்தொட்ட, பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி கடற்கரையோரங்களில் கடுமையாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment