Thursday, January 26, 2012

5 ஆண்டு கால சேவையை பூர்த்தி செய்த தாதியர் வடக்கில் கடமையாற்றுவது காட்டாயமாகின்றது.

வடமாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் சேவையை பூர்த்தி செய்த தாதியருக்கு வடக்கில் பணியாற்றுவதை கட்டாயமாக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.வடமாகாண தாதியர் பற்றாக்குறையை கவனத்திற் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் விஞ்ஞான பாடத்திற்கு மேலதிகமாக கலை மற்றும் வர்த்தக துறையில் உயர்தரத்தை பூர்த்தி செய்தவர்களும் தாதியர் பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இதற்கு தொழிற்சங்கம் ஒன்று எதிர்ப்பு தெரிவித்ததனால், இவ்வாண்டு முதல் மீண்டும் தாதியர் சேவையில் விஞ்ஞான துறையில் சித்தியடைந்தவர்களை மாத்திரம் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

வடமாகாண வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு ஏனைய மாகாணங்களில் பணியாற்றும் தாதியரை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment