பாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.
பாதுகாப்பு வலயத்துக்குள் அமையப் பெற்று இருந்த தேவாலயம் ஒன்றில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரிடம் தஞ்சமடைந்திருந்த 400 சிறுவர்களை வன்னி யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகள் பலாத்காரமாக பிடித்துச் சென்றுள்ளனர் என கொழும்பு அமெரிக்க தூதரகத்திலிருந்து இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த செய்தி ஒன்றில் குறிப்பட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இச்சிறுவர்களில் அநேகமானவர்கள் வயது குறைந்தவர்கள். விடுதலைப் புலிகளால் இவர்கள் இயக்கத்துக்கு பிடித்துச் செல்லப்படலாம் என்று பாதிரியார் பயப்பட்டு இருக்கின்றார்.
எனவே இச்சிறுவர்களை தேவாலயத்துக்குள் வைத்து பாதுகாத்து வந்திருக்கின்றார்.
ஆனால் புலிகள் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டனர். தேவாலயத்தை உடைத்து உள்ளே புகுந்து சிறுவர்களை பலாத்காரமாக பிடித்துச் சென்று இயக்கத்தில் சேர்த்தனர்.
புலிகளின் இக்காட்டுமிராண்டித்தனத்தை மன்னார் மாவட்ட ஆயருக்கு முறையிட்டு இருக்கின்றார் பாதிரியார்.
அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்குக்கு சொல்லிக் கவலைப்பட்டு இருக்கின்றார் மன்னார் மாவட்ட ஆயர்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2009 ஆண்டு ஏப்ரல் 07 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் மேலும் கூறியுள்ளது.
0 comments :
Post a Comment