Monday, January 2, 2012

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 37 இந்திய மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றினர்.

வடபகுதி கடலில் தத்தளித்த 37 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரால் காப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இலங்கையின் கடற் பிரதேசத்திற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகள் அலைகளினால் அடித்து செல்லப்பட்டன.

அத்துடன் அண்மையில் ஏற்பட்ட தேன் சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்கள் தொடர்பாகவும் 5 படகுகள் தொடர்பாகவும் நாங்கள் தேடுதல்களை மேற்கொண்டோம். இதன் போது 30 ஆம் திகதி 4 மீனவர்களும் 31 ஆம் திகதி 2 மீனவர்களும் எம்மால் காப்பற்றப்பட்டனர்.

மொத்தமாக நாங்கள் இதுவரை 35 மீனவர்களை காப்பாற்றியுள்ளோம். இந்திய மீனவரகள் இலங்கை கடற்படையினால் தொல்லைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும் இலங்கை கடற்பகுதியில் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்குவதற்கு இலங்கை கடற்படையினர் மட்டுமே உள்ளது என்பது இதன் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment