அதிநவீன எப்-35 போர் விமானங்கள் இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஆவலாம்.
அதிநவீன எப்-35 போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்க, அமெரிக்கா தயாராக உள்ளது என, பென்டகன் அதிகாரி தெரிவித்தார். அமெரிக்க நாட்டின் ராணுவ தலைமையகமாக பென்டகனில், துணைச் செயலர் ராபர்ட் ஷேர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, சமீபத்தில் பேச்சு நடத்தின. இதையடுத்து, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கத் தேவையான பாதுகாப்பு வசதி, ஐந்தாம் தலைமுறை அதிநவீன எப்-35 ரக போர் விமானங்கள் ஆகியவற்றை அளிப்பதற்கு, அமெரிக்கா விரும்புகிறது.
இந்தியாவுக்கான ராணுவத் தேவைகளை பூர்த்தி செய்வதில், அமெரிக்காவின் உதவி தொடரும். மேலும், எப்-35 ரக போர் விமானங்கள் விற்பனை குறித்து, இந்தியாவின் பதிலுக்காக அமெரிக்கா காத்திருக்கிறது. இவ்வாறு அமெரிக்க ராணுவத் துறை துணைச் செயலர் ராபர்ட் ஷேர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment