புதிதாக 3000 ஆசிரியர்களுக்கு இந்த வருட இறுதிக்குள் நியமனம்
இவ்வருட இறுதிக்குள் 3000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
வழங்கப்படும் பாடசாலையில் கடமையாற்ற விருப்பம் தெரிவித்தால் மட்டுமே நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகிறன. இந்த நேர்முகப் பரீட்சையின் போது அவர்களுக்குரிய பாடசாலை பெற்றுக் கொடுக்கப்படும்.
கொடுக்கப்படும் பாடசாலையில் கடமையாற்ற விரும்பாதவர்களுக்கு நியமனம் வழங்கப்படமாட்டாது எனவும், எந்தக் காரணம் கொண்டும் வழங்கப்பட்ட பாடசாலைகள் மாற்றிக் கொடுக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்களே புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அமைச்சில் நடைபெற்ற 1000 பாடசாலை திட்டம் மற்றும் ஆரம்ப பாடசாலை வலையமைப்பை விருத்தி செய்தல் தொடர்பான விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment