27 வருடங்களின் பின் சொந்த இடத்திற்குச் செல்லும் கொக்குத் தொடுவாய் மக்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரை துறைப்பற்று பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட கொக்குத் தொடுவாய் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 27 வருடங்களின் பின்னர் சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கிராம மக்கள் அனைவரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக 27 வருடங்களுக்கு முன்னர் தங்களுடைய சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில்இ வவுனியா செட்டிக்குளம் முகாமில் தங்கியிருந்தோரில் 21குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் நாளை(06.01.2012) இந்தப் பகுதியில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇ கொக்குத் தொடுவாய் மத்தி கிராமத்தில் கண்ணிவெடிகள் இன்னமும் அகற்றப்படாது இருப்பதனால்இ அவை அகற்றப்பட்டவுடன் அங்கு விரைவில் மக்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் எனவும் முல்லைத்தீவு அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment