நைஜீரியாவில் குண்டு வெடிப்பு சாவு 250 ஆக உயர்வு: வெடிகுண்டு நிரப்பிய 8 கார்கள் பறிமுதல் .
நைஜீரியாவின் 2-வது பெரிய நகரமான கனோவில் பொகோஹரம் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். போலீஸ் நிலையங்கள், போலீஸ் தலைமை அலுவலக கட்டிடம், பாஸ்போர்ட் மற்றும் குடியுரிமை அலுவலகங்களில் நடந்த தாக்குதல்களில் 162 பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சாவு எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது. தெருக்களிலும், ஆஸ்பத்திரிகளின் சவக்கிடங்குகளிலும் பிணங்கள் குவிந்து கிடக்கின்றன.
இதற்கிடையே, தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய கார்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே, போலீசார் அவற்றை கண்டறிந்து செயல் இழக்க செய்து வருகின்றனர். இதுவரை 8 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
ஆகவே, பதட்டத்தை தணிக்க மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில் மத குருக்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த கனோ நகரை அதிபர் ருட்லக் ஜோனாதன் நேற்று நேரில் பார்வையிட்டார். காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
0 comments :
Post a Comment