Tuesday, January 17, 2012

மின்சார சபை , பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு 25 சதவீத சம்பள அதிகரிப்பாம்

இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன, நீர் விநியோக வடிகாலமைப்புச் சபை ஊழியர்களுக்கான சம்பளம் 25 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மின்சக்தி வலுசக்தி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இந் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 18 சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவற்றின் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்நிலையில் இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன, நீர் விநியோக வடிகாலமைப்புச் சபை ஊழியர்களுக்கான சம்பளம் 25 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com