2012 ஜனவரி முதலாம் திகதி நேற்று அதிகாலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 164 விபத்துக்கள் ஏற்பட்டதுடன் 9 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இதே வேளை வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 441 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் புத்தாண்டு பிறப்பின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தங்காலை, கொழும்பு, கம்பஹா மொனராகலை மற்றும் அநுராதபுர மாவட்டங்களில் இடம்பெற்ற 5 விபத்து சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்திருப்பதுடன் 28 பாரிய விபத்து சம்பவங்களும் 57 சிறு விபத்து சம்பவங்களும் ஏனைய 65 விபத்துக்களும் இக்காலப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 4 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதே வேளை புதுவருட தினத்தில் வீதி விபத்துக்களால் காயமடைந்தோரின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசி வைத்தியசாலையின் விபத்து பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 36 வீதத்தினால் அதிகாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பட்டாசு வெடி விபத்துக்களால் பாதிக்கப்பட்டு 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
...............................
No comments:
Post a Comment