Tuesday, January 24, 2012

நீர்கொழும்பு நகர மத்தியில் இடையூறாக இருந்த 23 நடைபாதை கடைகள் அகற்றப்பட்டது.

அரசாங்க நிறுவனங்களுக்கும் ,வியாபார நிலையங்களுக்கும் , பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நீர்கொழும்பு நகர மத்தியில் அமைக்கப்பட்டிரருந்த 23 நடைபாதை கடைகள் நீர்கொழும்பு பொலிசாரால் இன்று முற்பகல் அகற்றப்பட்டன. நீர்கொழும்பு ,ராஜபக்ஷ வீதியில் (றீகல் பட மாளிகை அருகில்) வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகளே இவ்வாறு பொலிஸாரால் அகற்றப்பட்டன.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவினரின் முறைப்பாட்டின் பேரில் நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் ஏ.எம்.என்.பி.அமரசிங்க இதற்கான உத்தரவை நேற்று திங்கட்கிழமை பிறப்பித்துள்ளார் .

ஆடை வகைகள் ,பழ வகைகள் , அலங்காரப்பொருட்கள் , பீங்கான் வகைகள் போன்றவைகள் இந்த நடைபாதை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com