பகிடிவதை முன்று மாணவர்களுக்கு விளக்க மறியல். 22 பேர் பிணையில் விடுதலை.
கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடி வதை என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக அடையாளங்காணப்பட்ட கலைபீடத்தின் இரண்டாம் ஆண்டின் 21 மாணவர்களும், 4 மாணவிகளும், கண்டி மஜிஸதிரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படடனர். இவர்களுள் மூவர், எதிர்வரும் 9 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி 22 மாணவர்களை தலா ஒரு லட்சம் ரூபா வீதம் சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள், அடுதத மாதம் 7 ஆம் திகதிக்கும், 10 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட தினங்களில், கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலமளிக்க வேண்டுமெனவும் ஆணை பிறப்பித்த கண்டி மஜிஸ்திரேட் ரவீந்திர பெரேரா, அப்பாவி பெற்றோர், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், தமது பிள்ளைகளை, கல்வியை தொடருவதற்காக, பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகின்றனர். ஏனையவர்களின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற மாணவர்கள், அவர்களையும் அழித்து, தாமும் அழியாமல், உயர்கல்வியை பெற்று, சிறந்த பிரஜையாக எதிர்காலத்திற்கு தயாராகுமாறும் வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.
0 comments :
Post a Comment