இன்று முதல் 22 ஆம் திகதி வரை நுளம்பு ஒழிப்பு வாரம்!
இன்று முதல் 22 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தை சுகாதார அமைச்சு தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வழமைக்கு மாறாக டெங்கு நோய்க்கு உள்ளான வர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்தே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயின் பேராபத்திலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக நுளம்பு ஒழிப்பு பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட முன்வர வேண்டும் என்று அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, மேல்மாகாணத்தில் கொழும்பு ,கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையானோர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment