225 பேரை கொன்ற படைவீரனுக்கு பாராட்டு.
அமெரிக்காவை சேர்ந்தவர் கிறிஸ்கெயில். இவர் அமெரிக்க கப்பற்படையான 'நேவி சீல்' பிரிவில் வீரராக பணிபுரிந்தார். இவர் குறி தவறாமல் சுடுபவர். இவர் வைத்த குறி தப்பாது. அவ்வாறு அவர் சுட்டதில் இதுவரை 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முதன் முதலாக அவர் ஒரு பெண்ணை சுட்டுக்கொல்ல தயங்கிய சம்பவம் ஈராக்கில் நடந்தது. சதாம் உசேனை பிடிப்பதற்கு முன்பு அமெரிக்க கப்பலை வெடிகுண்டு வீசி தகர்க்க அந்த பெண் வந்தாள். பெண் என்பதால் அவளை சுட கெயில் தயங்கினார். ஆனால் உடனே சுட்டு வீழ்த்தும்படி ராணுவ பிரிவு தலைவர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவளை சுட்டு வீழ்த்தினார். இருந்தும் அந்த குண்டு வெடித்துவிட்டது.
அதில் இருந்துதான் துப்பாக்கியால் சுடும்போது ஏற்படும் தயக்கத்தை முற்றிலும் கைவிட்டார். எதிரிகளை குறி பார்த்து சுட்டு வீழ்த்தி வந்தார். இவருக்கு முன்பு அமெரிக்க வரலாற்றில் ராணுவ வீரர் அடல்பெர்ட் சுப் வால்ட் டிரன் என்பவர் 109 பேரை சுட்டுக்கொன்ற வரலாறு இருந்தது. இவர் வியட்நாம் போரில் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவரது இச்சாதனையை கிறிஸ் கெயில் முறியடித்து உள்ளார்.
இவர் சுட்டுக்கொன்றவர்களில் மிகவும் முக்கிய மானவர்களின் பட்டியலில் அல்- ஷபிதான் ரமாத் என்பவன் முக்கியமானவன். அவன் தலைக்கு அமெரிக்கா ரூ.10 லட்சம் அறிவித்து இருந்தது. கெயில் 225 பேரை சுட்டுக்கொன்று இருந்தாலும் அவர் 160 பேரை கொன்றுள்ளதாக ராணுவ தலைமையகமான பெண்டகன் அதிகாரபூர்வ மாக அறிவித்துள்ளது. இந்த அற்புதமான தகவல்களை அவர்தான் புதிதாக எழுதியுள்ள குறி தவறாது சுட்டு வீழ்த்துபவர் என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அமெரிக்கா கடற்படையில் 10 ஆண்டுகளாக பணி புரிந்த அவர் கடந்த 2009-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
0 comments :
Post a Comment