வட பகுதி புகையிரதப் பாதை அமைப்புப் பணிகள் 2013 முடிவில் நிறைவடையும் - இந்தியத் தூதுவர்
இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வட பகுதியிலும் மேற்கொள்ளப்படும் புகையிரதப் பாதை அமைப்புப் பணிகள் 2013 முடிவில் நிறைவடையும். அத்துடன் வட மாகாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தில் கப்பல் சிதைவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையேயான நெருங்கிய சகோதரத்துவ உறவிலான அபரிமிதமான முன்னேற்றம் இவ்வாண்டிலும் தொடரும்.
இதன் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தில் தற்போதுள்ள இறங்கு துறைக்குச் சரக்குகளை இறக்குவதற்காகக் கப்பல்கள் திரும்பவும் வர முடியும். இதனால் யாழ்ப்பாணத்தின் கடல் வாணிபம் முன்னேற்றமடையும். தென் பகுதியிலும் ஆரம்பிக்கப்பட்ட ரயில் பாதை ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment