அமெரிக்காவில் போதைப்பொருள் விற்ற இந்தியருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை.
அமெரிக்காவில், வாசனைப் பொருள் விற்பனை என்ற பெயரில், போதைக் கும்பல் மூலம் கறுப்புப் பணம் சம்பாதித்த இந்தியருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியினரான விக்ரம் தத்தா, 51, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் லரெடோ என்ற இடத்தில், வாசனைப் பொருள் விற்பனை நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த இடம், மெக்சிகோ, அமெரிக்கா எல்லையில் உள்ளது. தத்தா, தனது நிறுவனம் மூலம், மெக்சிகோவில் உள்ள நிறுவனங்களுக்கு வாசனைப் பொருள் விற்பனை செய்து வந்தார். அதற்குப் பணமாக, அமெரிக்காவில் போதை மருந்து விற்பனை மூலம் கிடைத்த கறுப்புப் பணத்தைப் பெற்றுக் கொண்டார். இதற்காக, சினலோவா என்ற போதை மருந்து கும்பலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி, அவர்கள், போதை மருந்து விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, மெக்சிகோ பணமான பெசோவை அளித்தனர். தத்தா, அந்தப் பணத்தை, அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ பணம் மாற்றும் நிலையங்களில், அமெரிக்க டாலர்களாக மாற்றிக் கொண்டார். தத்தாவின் குற்றம் கடந்தாண்டு தெரியவந்தது. விசாரணையில், அவரும் உண்மையை ஒப்புக் கொண்டார். நேற்று மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்த விசாரணையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment