தேசிய சுதந்திர தினத்தையொட்டி, 2 ஆயிரம் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான பரிந்துரை, ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்கு, சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க தெரிவித்துள்ளார். சிறு குற்றங்கள் காரணமாக, கைதிகளாக உள்ளோர் மற்றும் தணடப்பணத்தை செலுத்த முடியாது சிறையில் உள்ளோர், ஊனமுற்ற சிறைக்கைதிகள், 70 வயதினை தாண்டிய சிறைக்கைதிகளை விடுவிக்க, தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள 500 பேரும், இவர்களில் அடங்குகின்றனர். தண்டப்பணத்தை செலுத்த முடியாதுள்ள ஆயிரத்து 500 பேரும் இருப்பதாக, அமைச்சின் செயலாளர் திசாநாயக்க தெரிவிக்கிறார். இவர்கள் காரணமாக, சிறைச்சாலைகளில், இடப்பாற்றாக்குறை காணப்படுவதாகவும், சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உரிய பரிந்துரையினை கருத்திற்கொண்டு, ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து, விடுவிக்கப்படும் சிறைக்கைதிகள் தொடர்பான பெயர் பட்டியல் தயாரிக்கப்படுமென்றும், அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment