Thursday, January 26, 2012

ஈராக்கில் 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை ?

ஈராக்கில் 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் கொலை குற்றம் மட்டுமின்றி, பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஈராக்கில் கடந்த 19ம் தேதி ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தென்ஆப்ரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நவநீதம் பிள்ளை இந்த அமைப்பின் தலைவராக இருக்கிறார். அவர் கூறியதாவது: சட்டப்படி, வெளிப்படையாக விசாரணை நடந்திருந்தால்கூட, ஒரே நாளில் 34 பேரை தூக்கில் போட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளில் 1,200 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் 64 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

விசாரணை நியாயமாக நடப்பதில்லை. சிறு குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்பது ஈராக் மீதான பொதுவான குற்றச்சாட்டுகள். சாதாரண குற்றங்களுக்குகூட மரண தண்டனை வழங்கப்படுவது சதாம் ஆட்சிக் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது, கருத்து சுதந்திரத்தை பறிப்பது, சந்தேக குற்றவாளிகளை ரகசிய சிறையில் அடைத்து சித்ரவதை செய்வது ஆகியவற்றில் ஈராக் படையினர் ஈடுபடுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது.

இதையடுத்து, சர்வாதிகாரப் போக்கில் நடந்துகொள்ள கூடாது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் எச்சரிக்கை விடுத்த 2 நாளில், 34 பேர் தூக்கில் இடப்பட்டிருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.

இந்நிலையில் நாட்டுக்கு எதிரான ஊடகவியலாளர்களுக்கு எதிராக, தாயகத்தின் ஊடகவியலாளர்கள், அணிதிரண்டனர். தாயகத்திற்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால், பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.

சுதந்திர ஊடக அமைப்பு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில், சுயாதீன ஊடக அமைப்பு மற்றும் பொது அமைப்புகள் உட்பட பல நிறுவனங்களின் பிரதிநிதிகளும், தாயகத்தின் மீது பற்று வைத்திருந்தோரும், கலந்து கொண்டனர்.

கறுப்பு ஜனவரி என்ற போர்வையில், சுதந்திர ஊடக இயக்கம், நாட்டுக்கு எதிராக சர்வதேச ரீதியில் பிழையான கருத்துக்களை சித்தரிப்பதற்கு, மேற்கொள்ளும் முயற்சியை தோல்வியடையச்செய்வதே, இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் நோககமாகும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சகல நிறுவனங்களையும் பிரதிநிதித்துலப்படுத்தி, ஏராளமான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். தாயகத்திற்கு எதிராக செயற்படுவோருக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டன. நாட்டுக்கு எதிராக வெளிநாடுகளிலிருந்து செயற்படும் ஊடகவியலளார்களின் செயற்பாடுகளையும், அவர்கள் கண்டித்தனர்.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, வீதியில் செல்லும் வாகனங்களுக்கு தடை ஏற்படாத வகையிலும், பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத விதத்திலும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டமை, விசேட அம்சமாகும்.

இந்த ஆர்ப்பாட்டம், நாட்டுக்கு எதிராக செயற்பாடுவோருக்கு எதிராக, நாட்டின் மீது பற்று வைத்தவர்கள், மேற்கொண்ட ஓர் ஆர்ப்பாட்டமென, ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com