புலி உறுப்பினர் பற்றிய தகவல்களை மறைத்த நபருக்கு 18 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை!
புலிப் உறுப்பினர் ஒருவர் பற்றிய தகவல்களை மறைத்த நபருக்கு 18 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் சுனில் ராஜபக்ஷவினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த காப்புறுதி முகவர் ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் இடம்பெற்ற பஸ் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய புலி உறுப்பினர் பற்றிய தகவல்களை மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கவரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குறித்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் மனைவி கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால் காவல்துறையினரிடம் தகவல்களை மறைத்ததாக தண்டனை விதிக்கப்பட்ட காப்புறுதி முகவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எனவே தண்டனையில் தளர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்படும் நபர்களுக்கு எந்தவித சலுகைகளையும் வழங்க முடியாது என நீதவான் அறிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment