மத்திய வங்கி மீது புலிப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தி, இன்றுடன் 16 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. 1996 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி புலிப் பயங்கரவாதிகள், மத்திய வங்கி மீது தாக்குதல் நடாத்தினர். இலங்கை பொருளாதாரத்தின் இருதயமாக விளங்கிய மத்திய வங்கி மீது பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடாத்தினர். இந்த தாக்குதலின் போது, மததிய வங்கி ஊழியர்கள் உட்பட 91 அப்பாவி பொது மக்கள், கொல்லப்பட்டனர். ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோர், காயமடைந்தனர். நூற்றுக்கும் கூடுதலானோர், பார்வையிழந்தனர்.
குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்ததுடன் அவர்களின் ஆத்தமசாந்திக்கா விசேட பூஜை நிகழ்வுகள் மத்திய வங்கியின் தலைவர் அஜித் கப்ரால் தலையில் நிகழ்த்தியதுடன் நினைவுப் பலகை ஒன்றும் திரைநீக்கம் செய்யப்பட்டது.
வெடிபொருட்கள் அடங்கிய டிரக் வண்டி, மத்திய வங்கியின் நுழைவாயலில் பிரவேசித்த போது, முச்சக்கர வண்டியில் வருகை தந்த தற்கொலை குண்டுதாரி, மத்திய வங்கிக்குள் ஊடுறுவி மேற்கொண்ட தாக்குதலில், பல மாடிகளை கொண்ட மத்திய வங்கி கட்டிடத் தொகுதி மாத்திரமன்றி, அதனை அண்டிய 8 கட்டிடங்களும், சேதமடைந்தன.
இந்த பயங்கர தாக்குதலில், காயமடைந்தவர்களில், அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து நாட்டவர்களும், அடங்கினர். இந்த பயங்கர குண்டு தாக்குதலை நடத்திய பயங்கரவாத தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால், 200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கச் செய்வதற்கும் இந்த தாக்குதல் காரணமாக, அமைந்தது.
இந்த தாக்குதல், இடம்பெற்று பல வருடங்களுக்கு பின்னர், அதாவது செப்டெம்பர் 11 நியூயோர்க் தாக்குதல் நடாத்தப்பட்ட சர்ந்தப்பத்தில், இதுபோன்ற ஒரு தாக்குதலே , இலங்கை மத்திய வங்கி மீதும் மேற்கொள்ளப்பட்டதை, சர்வதேச சமூகம் உணர்ந்தது. பயங்கரவாத தாக்குதலினால் அழித்தொழிக்கப்பட்ட மத்திய வங்கி கட்டிடத் தொகுதி, தற்போது, சகல சவசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு கேடு விளைவித்த பயங்கரவாதமும், முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டு, நாட்டில் சமாதானம் நிலை நிறுத்தப்பட்டுள்ளமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.
...............................
No comments:
Post a Comment