13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்- சுமந்திரன் கனடாவில் முழக்கம்!
கோண்டாவில் கோதண்டராமன்
21 ஜனவரி 2012 அன்று கனடாவின் டொராண்டோ நகரில் புலிகளின் அமைப்பான 'கனடிய தமிழ் காங்கிரஸ் ' நடத்திய பொங்கல் விழாவில் தமிழ் கூட்டமைப்பு எம்பி சுமந்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையில், 1987 இல் இருந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறியுள்ளதுடன் அரசு தங்களுடன் மாத்திரமே ஒப்பந்தம் ஒன்று எழுத வேண்டும் என்றும் அதனடிப்படையிலேயே பேச்சு வார்த்தைகள் தொடர வேண்டும் என்றும் கூறினார். அப்படி நடந்தால் மாத்திரமே 'தெரிவுக் குழுவில்' அங்கம் வகிப்பது பற்றி ஆலோசிப்போம் என்றும் அவர் உறுதியாக கூறினார்.
இவ்வளவு காலமும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தக் கோருகிறோம் என்று சவடால் அடித்த கூத்தமைப்பினர் புலிகளின் மறு பிறப்புக்கள் மாத்திரமின்றி நேரடி வாரிசுகள் என்றும் நிரூபித்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் 'அடக்கி' வாசிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ள சுமந்திரன் இலங்கையில் அதிபர் மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குகள், ஊர்வலங்கள் என்பன நடத்தும் பொழுதும போர் குற்ற விசாரணை என்றெல்லாம் சொல்லும் பொழுதும் மகிந்தவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதாகவும் அழுதிருக்கிறார்.
பொங்கல் விழாவுக்கு கிறிஸ்தவனான சுமந்திரன் எதற்கு வரவேண்டும் என்பது புதிரான விஷயம். அந்த விழாவில் பொங்கல் பற்றி யாரும் பேசியதாகத் தெரியவில்லை. மஹிந்த அரசுக்குத் தலையிடி கொடுப்பது பற்றியே பலரும் அலட்டினார்கள்.
பாதிரி இராயப்பு பற்றி பேசுகையில் தான் தந்தை செல்வா நினைவுப் பேருரையில் சொல்லாதவற்றை பாதிரி இராயப்பு தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாகவும் அது பற்றி விசாரிக்கையில் 'இல்லையடா தம்பி நான் அதைப் படித்துப் பார்க்கவில்லை' என்றும் சொன்னவராம். சம்பந்தன் கும்பலுக்கு எதிராக பாதிரிகள் கிளம்பியிருக்கிறார்கள். இந்த பாதிரியாரை 'ஆமைப் பாதிரி' என்றும் சொல்வதுண்டு. மன்னாரிலிருந்து பிரபாகரனுக்குப் பிடித்த ஆமையிறைச்சியை வன்னிக்குக் கொண்டு செல்வது இவரது வேலையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
13 ஆம் அரசியல் சாசனத் திருத்தப்படியே தீர்வு காண அதிபர் மஹிந்த ஒத்துழைப்பார் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் தனது சமீபத்திய விஜயத்தின் போது கூறி வெளியிட்ட அறிக்கைக்கு எந்தப் பதிலும் கொடுக்கப் போவதில்லை என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளமை பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியாவினால்த்தான் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றெல்லாம் புலம்பிய கூத்தமைப்பினர் இப்பொழுது இந்தியாவுக்கு 'செருப்படி' கொடுத்துள்ளனர். தமிழர் பிரச்சனை தீர்ந்தால் தங்களின் அரசியலுக்கு முடிவு காலம் வந்துவிடும் என்ற பயத்தினாலும் தமிழர்களை எப்பொழுதும் ஏமாற்ற ஒரு'தமிழ் பிரச்சனை' தேவை என்பதனாலும் தமிழர் கூத்தமைப்பு 13 ஆம் திருத்தச் சட்டத்தினை ஏற்க மாட்டோம் என்று சொல்வதாகவே தெரிகிறது.
பேச்சின் இடையே வடக்கு கிழக்கில் இராணுவம் இருப்பதுதான் மிகப் பெரிய பிரச்சனை என்றும் இராணுவ மயமாக்கல் என்றும் அவருடைய பேச்சு தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு வந்து புலி வால்களிடம் நக்கி அலையும் இவர்களினது பேச்சுக்கள் இராணுவத்தின் இருப்பினால் தங்களினதும் புலிகளினதும் பயங்கரவாத சேட்டைகளுக்கு இடமில்லை என்பது நன்றாகவே புரிந்தது.
கூத்தமைப்பு எம்பிக்கள் தங்கள் தொகுதிப் பக்கமே போவது கிடையாது. இவரும் தான் நிலத்தில் இருப்பதை விட ஆகாயத்தில்த்தான் அதிக நேரம் சஞ்சரிப்பதாக வேறு தம்பட்டம் அடித்தார். இவர் ஆகாயத்தில் நிற்பதனால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கஞ்சி கிடைக்க வழி இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் மஹிந்த அரசின் கைகளையே நோக்க வேண்டியுள்ளது. வறுமை காரணமாக வன்னியில் பல தற்கொலைகள் நடக்கின்றன. இவற்றைப் பற்றித் துளியும் பேசாத சுமந்திரன் அங்குள்ள விதவைகள் பற்றியும் இராணுவம் பற்றியும் சம்பந்தமில்லாமல் பேசியது அந்த விதவைகள் எல்லாம் விபச்சாரிகள் என்பதை வலியுறுத்தவே என்றும் தெரிகிறது.
இந்தியாவுக்கு முகத்தில் கரி பூசியுள்ள சம்பந்தன் கும்பல் தங்களின் குடும்பங்களை இந்தியாவில்த்தான் வைத்திருக்கிறார்கள். இந்தியா இப்படியாக முதுகில் குத்தும் கும்பல்களை இந்தியாவிலிருந்து துரத்த வேண்டும். 'வெள்ளையர்களுட்னும்' தென்னாபிரிக்கர்களுடனும்' பேசித் தமிழர் பிரச்சனை தீர்க்கப் புறப்பட்ட இந்த சம்பந்தன் கும்பல் இதுவரையில் என்ன பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் கனடாதான் இலங்கைக்கு எதிராக முன்னிலையில் நின்று கை கொடுக்கிறது என்பது அவருடைய பேச்சில் வெளிப்பட்ட உண்மை.
வெள்ளையர்கள் துப்பாக்கிகளையும், குண்டுகளையும் கொடுத்து தமிழர்களைக் கொல்ல வழி சமைப்பார்களே ஒழிய சமாதானமோ, ஐக்கியமா ஏற்பட வழி பண்ணப் போவதில்லை. தமிழர்களின் மரணங்களின் மூலம் தங்களின் வாழ்வைச் செழிப்பாக்கியுள்ள கும்பல்கள் இன்னமும் தமிழர்கள் அழிய வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். அதற்குச் சம்பந்தன் கும்பல் சாமரம் வீசுகிறார்கள்.
சமீபத்தில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்ஷ வெளிநாடுகளில் உள்ள புலிகள் மீண்டும் இலங்கையில் கலகம் உண்டு பண்ணவே முயற்சிக்கிறார்கள் என்றும் இதனால் தமிழ் மக்களே பாதிக்கப்பட உள்ளனர் என்று எச்சரித்ததும் பலருக்கு ஞாபகமிருக்கலாம். சுமந்திரனின் பேச்சு இலங்கையில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை உருவாக்கும் அத்திவாரமாகவே தென்படுகிறது.
அம்மா கிண்ணி பிச்சை எடுக்க மகன் கும்ப கோணத்தில் கோ தானம் செய்தானாம்.
கனடிய தமிழ் காங்கிரஸ் கோஷ்டியினர் சேர்ந்த பணத்தில் ஐம்பதினாயிரம் டாலர்களை அம்னஸ்டி இடர்நாஷனால் அமைப்பிற்கு வழங்கியுள்ளனர். அங்கு சமூகமளித்திருந்த அந்த அமைப்பின் பிரதிநிதி பலரிடமும் 'இராஜபக்ஷவை' விடமாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருந்தது வெள்ளையர்கள் இலங்கையை நாசம் செய்வதில் மும்முரமாக உள்ளதைக் காட்டுகிறது.
அலெக்ஸ் நெவே என்ற கனடிய 'சர்வதேச மன்னிப்பு சபை' (Amnesty International) பிரதிநிதி பேசுகையில் கம்போடியா போன்று பல தசாப்தங்கள் கடந்தாலும் இராஜபக்ஷவை கூண்டில் ஏற்றுவோம் என்று சொன்னார். இருந்த புலிவால்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சர்வதேச மன்னிப்பு சபை என்ற வெள்ளையர்களின் அமைப்பு புலிகள் போன்ற கிரிமினல் கும்பல்களின் பங்காளிகள் என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை. புலிகளால் நடத்தப்பட்ட கூட்டத்தில் 'இந்த மனித உரிமைக்காரர்களுக்கு' என்ன வேலை?
புலிகளில் இருந்து கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், மூன்று லட்சம் தமிழர்களைப் பணயக் கைதிகளாக பிடித்தமை போன்ற குற்றச் சாட்டுக்களில் சுமார் இரண்டாயிரம் புலிகள் நீதி மன்ற விசாரணைகளை நோக்கியுள்ளனர். கனடாவிலுள்ள வெங்காயங்கள் தமிழினி போன்ற கொலைகாரிக்கு தூக்குத் தண்டனை வழங்கினால் என்ன பண்ணப் போகிறார்கள்? தமிழினி, பாதிரி ஜேம்ஸ் பத்திநாதன் போன்றவர்களை முகாம்களில் இருந்த தமிழர்களே அடையாளம் கண்டு பிடித்துக் கொடுத்துள்ளனர்.
போர்க் குற்றம் என்று விசாரணை தொடங்கினால் அடைத்து வைக்கப்பட்ட புலிகள் மாத்திரமின்றி வெளிநாடுகளிலுள்ள புலிகளும் தூக்கில் தொங்க வேண்டி வரும் என்பதை தெரியாமல் இந்தக் கூட்டத்தில் ஊழையிட்டனர். வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ளவர்கள் பற்றி எந்த வித அக்கறையும் அற்ற சுயநலக் கும்பல் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
யாழ்ப்பாணத்தில் அயலவனுடன் சண்டையில் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தவுடன் ஆரியகுளம் பொன்ராசா, கொட்டடி தேவேந்திரன் போன்ற ரவுடிகளை வைத்து அயலவனுக்கு 'நாலு சாத்து சாத்தி' சந்தோசம் கண்ட யாழ்ப்பாணத்தவர்கள் இன்றும் அப்படியாக வெள்ளை சண்டியர்களைக் கொண்டு இராஜபக்ஷவுக்கு 'நாலு சாத்து' சாத்தவே அலைகிறார்கள். யாழ்ப்பாணத்தில் நடத்திய விளையாட்டுக்களை சர்வதேச ரீதியிலும் அம்னஸ்டி இன்டர்நாஷனல் போன்ற வெள்ளைக் கும்பலுக்குப் பணம் கொடுத்து நடத்தலாம் என்று கனவு காண்கிறார்கள்.
இலங்கையில் தமிழர்களுக்கு எந்த உதவிகளையும் செய்யாத இந்த காங்கிரஸ் வெள்ளையர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அள்ளி வீசி இளித்துக் கொண்டு நிற்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டவர்களுக்கே இந்த விழாவில் பங்கு பற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் 100 , 750 டாலர் டிக்கெட்டுக்கள் என்ற அடிப்படையிலேயே அனுமதிக்கப்பட்டனர். அங்கு வந்தவர்களில் பல ஆட்கடத்திகள், தூள் கடத்திகள், வங்கிக் கொள்ளையன் பாதிரி அன்டன் சின்னராசா, மற்றும் பல 'உண்டியல்' கும்பல்களையும் காண முடிந்தது. அன்டன் சின்னராசா இப்பொழுது அன்டன் 'புலிப்பு'. அங்கு வந்த வெள்ளையர்களிடம் ஓடி ஓடி இளித்துக் கொண்டிருந்தான். சென்னையிலிருந்து கனடாவுக்கு அனுப்பப்பட்ட புலிகளின் பிரச்சார பிரசுரங்கள் அடங்கிய ஒரு 'கொண்டயினரை' இலங்கையரசு கொழும்பில் கைப்பற்றியிருந்தது. அந்த கொண்டயினர் பாதிரி சின்னராசாவுக்கே முகவரியிடப்பட்டிருன்தது.
இந்த கூத்துக்கு தமிழர்களுக்குப் பொங்கல் விழா என்று தொலை பேசிகள் மூலம் அழைப்பு விடப்பட்டிருந்தது. வெள்ளையர்களுக்கு 'தமிழர்களின் பாரம்பரிய விழா என்றும் சொல்லப்படிருந்தது. தமிழர்களுக்கு புக்கைத் தளிசைகள் இறுதியில் கொடுக்கப்பட்டன.
காணாமல் போன நபர்
கனடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் என்று இவ்வளவு காலமும் வலம் வந்து புலிகளுக்கு வக்காலத்து வாங்கிய டேவிட் பூபாலபிள்ளையைக் காணவில்லை. கப்பலில் வந்தவர்களில் ஒரு புலியைக் காட்டு என்று கனடிய அரசுக்கு சவால் விட்டவர் இவர். ஆனால் வந்தவர்கள் முழுவதும் புலிக் குமபல்கள் என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். ஆயினும் பூபாலபிள்ளைக்கு மூக்குடைக்கும் விதமாக வந்தவர்களில் சிலர் தாங்கள் புலிகள் என்பதை சொல்லியுள்ளனர். இந்த பூபாலபிள்ளை ஒரு ஆட்கடத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால்த்தான் என்னவோ அந்தாளைக் காணமுடியவில்லை.
இந்த தமிழர் விழாவில் எந்த தமிழனையும் தமிழர்களின் உடையில் காணமுடியவில்லை என்பது இன்னொரு தமாஷ். அதிலும் மார்க்கம் கவுன்சிலர் லோகன் கணபதி பாகிஸ்தானிய சல்வார்கமிஸ்இ குர்த்தாஇ கால்வரை நீண்ட துப்பட்டாவுடன் கோமாளி போல காட்சி கொடுத்தார். இவர்தான் மார்க்கம் கவுன்சிலில் இருக்கும் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதி.
இந்த காங்கிரசின் முக்கிய புள்ளி ஆனந்த சங்கரியின் புத்திரன் கரி சங்கரி என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொருவர் பரஞ்சோதி டீச்சர் என்பவரின் மகன். இந்த பரஞ்சோதி டீச்சர் முன்னர் புலிகளின் ஊர்வலங்களில் 'தமிழ்த் தாய்' வேஷம் போடுபவர். சமீபத்தில் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டவர். இவரின் கைதை அடுத்து பல புலி வால்களுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. ...............................
0 comments :
Post a Comment