Wednesday, January 18, 2012

கண்ணி வெடி அகற்றுவதற்கு 125 சதுர கிலோ மீற்றர் நில்பரப்பே எஞ்சியுள்ளதாம்.

வடக்கு கிழக்கில் 126 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியிலேயே இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளதாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில்,

1934 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட நிலப்பகுதியில் கண்ணிவெடிகள் கடந்த ஆண்டு இறுதிக்குள் அகற்றப்பட்டன. இதற்கென, விசேட பயிற்சி பெற்ற 3 ஆயிரத்திற்கும் 600 க்கும் மேற்பட்டவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அவ்வமைச்சின் கீழ் உள்ள மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் தேசிய மத்திய நிலையத்தின் கீழ், இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கண்ணிவெடிகளை அகற்றுவதற்கென, மேலும் 39 புதிய கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு, திட்டமிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதிகளில் கண்ணிவெடிகளை துரிதமாக அகற்றி, மக்களை அங்கு மீள்குடியேற்ற, அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com