115 வைத்தியசாலைகளின் சுத்தமான உணவு வழங்கப்படுகிறதா என திடீர் சோதனை.
பயன்பாட்டுக்கு உதவாத உணவு பொருட்களை வழங்கும் வைத்தியசாலைகளை சோதனையிடும் திட்டம், துரிதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம், விசேட தீர்மானத்திற்கு வந்துள்ளது. சுகாதார அமைச்சு அண்மையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சமயலறையை பரிசோதித்தது. அங்கு உணவு தயாரிப்பது தொடர்பாக ஊழியர்கள், எச்சரிக்கப்பட்டனர்.
வைத்தியசாலைகளில் வழங்கும் உணவு சுத்தமான முறையில் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளின்படி, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, இந்த வேலைத்திட்டத்தை துரிதமாக்குமாறு, பணிப்புரை வழங்கியுள்ளார்.
கடந்த வாரம் நாடு முழுவதும் உள்ள 115 வைத்தியசாலைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. சகல வைத்தியசாலைகளிலும் உணவு தயாரிப்பது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். உணவு தயாரிக்கும்போது, சமயலறையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment