யாழ்ப்பாண்தில் பல்வேறு மோட்டார் சைக்கிள் திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய திருட்டுக்கும்பல் ஒன்றைய இளவாலைப்பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர் நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைத்த இரசிய தகவலையடுத்து பண்டதரிப்பு பகுதியில் வைத்து இக்குழுவினை அவர்கள் கைது செய்தனர்.
யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திரனின் நெறிப்படுத்தலின் கீழ் 10 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரே இவர்களை கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பண்டத்தரிப்பு பகுதியில் திருடிய மோட்டார் சைக்களில் விற்பனை செய்யப்படுகின்றதென்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரை கைது செய்தனர், இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இவர்கள் வழங்கிய தகவலின் அடிப்டையில் மேலும் மூவரைக் கைது செய்ததோடு 10 சபாரி ரக மோட்டார் சைக்கிள்களையும் அவர்கள் கைப்ற்றினார்கள்.
மேலும் இவர்கள் யாழ்ப்பாணத்தில் மோட்டார்சைக்கிள்ளை திருடி அவற்றை வெளி மாவட்டங்களில் கொள்வனவு செய்ததாக போலியான ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்ததும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இன்றைய தினம் இவர்கள் அனைவரும் மல்லாம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment