கொழும்பை கண்காணிக்க மேலும் 100 கமெராக்கள்
கொழும்பில் மேலும் 100 கண்காணிப்பு கமெராக்களை பொருத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கண்காணிப்புகளை தீவிரப்படுத்தவும் குற்றச்செயல்களை தடுக்கவும் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிவதற்காகவும் மேலும் 100 கண்காணிப்பு கமெராக்களை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
. ஒல்கொட் மாவத்தையிலுள்ள பொலிஸ் கட்டிடமொன்றில் விசேட பொலிஸ் குழுவொன்று இக்கமெராக்கள் மூலம் கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறது.
புதிதாக பொருத்தப்படவுள்ள கமெராக்கள் நபர்களின் முகங்களையும் வாகனங்களின் இலக்கத்தகடுகளையும் இனங்காணக்கூடிய வகையிலானதாக இருக்கும் எனவும்,
குற்றச்செயல்களின் பின்னர் தப்பிச்செல்லும் கிரிமினல்களை இனம்காண்பதற்கு இக்கமெராக்கள் பயன்படுத்தப்படும்எனவும், பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு 28 இடங்களில் 350 மில்லியன் ரூபா செலவில் 108 கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment