Monday, January 2, 2012

ஒழுக்காற்று விசாரணையா? 100 விசாரணையாலும் தயாராவே உள்ளேன். தயாசிறி

ஐக்கிய தேசியக் கட்சியினுள் காணப்படும் உட்கட்சி மோதலை தொடர்சியா விமர்சித்துவரும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சியின் தலைமைப்பிடம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கம்பஹா பகுதியில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பா.உ தயாசிறி எந்தவொரு ஒழுக்காற்று விசாரணைக்கும் முகங்கொடுக்க தான் தயார் என தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தலைவருக்கு எதிராகவும் கூறவேண்டியவை எதுவும் இருந்தால் அதனை கூறுவதற்கு தான் ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை எனவும் ஜெ.ஆர்.ஜெயவர்த்தன மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவர் தவறு செய்தவர் என அறிவித்த வரலாறும் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கட்சிக்காக உழைக்கும் தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டதையிட்டு தான் கவலையடைவதாக தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர்கள் அற்ற மூத்தவர்களை கொண்ட கட்சியாக மாறி விட்டதெனவும் அரசுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே இதனை இளைஞர்கள் உள்ள கட்சியாக மாற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment