Monday, January 2, 2012

புத்தாண்டில் புதிதாக 10 குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்க, திட்டம்.

விவசாய செயற்பாடுகளுக்காக தற்போது நீர் பாய்ச்சுவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ஜள பிரதேசங்களை இலக்காக கொண்டு, புத்தாண்டில் புதிதாக 10 குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக, நீர்ப்பாசன மற்றும் நீரியல் வள முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

நீhப்பாசன துறையின அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக, இவ்வாண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பதுளை-மொரானகுளம், அம்பாறை- களுகல்ஓயா, மன்னார்- மல்வத்துஓயா, பொலநறுவை-கவுடுல்ல குளம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களை இவ்வாண்டில் அபிவிருத்தி செய்ய, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை நிர்மாணிக்க, திட்டமிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment