Tuesday, January 3, 2012

ஈராக் போரில் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் பலி: இங்கிலாந்து நிறுவனம் தகவல்

ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியது. இதை தொடர்ந்து கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நுழைந்து போரிட்டது. பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

அதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. எனவே அமெரிக்க ராணுவம் 9 ஆண்டுகளாக தொடர்ந்து ஈராக்கில் முகாமிட்டது. அங்குள்ள 505 முகாம்களில் 1 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் தங்கி இருந்தனர். வன்முறையில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் போர் நடத்தினர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் முற்றிலும் வாபஸ் ஆனது. ஈராக்கில் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்கா நடத்திய போரில் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக இங்கிலாந்தின் ஒரு தனியார் நிறுவனம் கணக்கெடுத்துள்ளது.

இந்த தகவலை ஈராக் அரசு வெளியிட்டுள்ளது. பலியானவர்களில் 80 சதவீதம் பேர் பொதுமக்கள். அதாவது 1 லட்சத்து 14 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர பலியானவர்களில் மீதமுள்ள 20 சதவீதம் பேர் அமெரிக்கா, ஈராக் ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் ஆவர். இறந்த ராணுவ வீரர்களில் 4,474 பேர் அமெரிக்கர்கள். பாக்தாத் ஒரு அபாயகரமான நகரம் என வர்ணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் போரின்போது பலியானவர்களில் பாதிப்பேர் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com