ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்த மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய அக்கட்சியின் 2 மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கட்சி தலைமைத்துவம் உட்பட மேலும் பல பகுதிகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று சிறிகொத்த தலைமையகத்தில் இடம்பெற்ற செயற்குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பை தொடர்ந்து முடிவுகள் வெளியிடப்பட்ட போது தலைமையகத்திற்கு வெளியே குழப்ப நிலை தோன்றியது. கட்சி தலைமையகத்தின் மீது கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
அத்துடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டன. கட்சி தலைமையகத்தில் இருந்த புத்தர் சிலையும் சேதமாக்கபபட்டது. கட்சியின் சின்னமான யானைச்சின்னமும் சேதமாக்கப்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த கலகத்தடுப்பு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களான சிறால் லக் திலக்க, மைத்ரி குணரத்ன, உட்பட ஐககிய தேசிய கட்சியின் 10 முக்கிய ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு கங்கொடவில நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்கள் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர். முடிவுகளை ஜீரணிக்க முடியாமல் குழப்பம் விளைவித்தோரை கண்டறிவதற்காக ஐக்கிய தேசிய கட்சி நால்வர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் 7 சந்தேக நபர்கள் இன்று நன்பகல் கைது செய்யப்ப்ட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
No comments:
Post a Comment