மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவர் பாம்புக்கடியினால் உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பட்டிப்பளை வைரவர் கோவில் வீதியை சேர்ந்த பரமானந்தம் கபிலன் (25வயது)என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை பாம்பு தீண்டிய நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது இடையில் அவர் உயிரிழந்ததாக பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் பேரின்பராசா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினராக இவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment