புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு கடனுதவி. ஓருவர் RS 250,000 பெறலாம்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் 2500 பேரின் சுயதொழில் வாய்ப்பினை ஆரம்பிக்கும் வகையில் மூன்று கோடி ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் தவிசாளர் ஈ. ஏ. சமரசிங்க தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிரி கஜதீரவின் ஆலோசனையின் பிரகாரம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தின் போது இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ரூபா 2,50,000 ஆகக் கூடியளவு ஒரு நபருக்கு வழங்குவதற்றகாக இந்தக் கடன் உதவி வழங்கப்படும். இதனை 10 வருடங்களுக்கு மீளத் திருப்பிச் செலுத்த வேண்டும். முதலாம் வருடத்தில் வட்டி மட்டும் அறவிடப்படும். அடுத்த மறு வருடத்திலிருந்து செலுத்த வேண்டி குறித்த பணத்துடன் வட்டியும் அறவிடப்படும். இந்த நிதி உதவியைப் பெற்ற இளைஞர்கள் ஒரு கோடி 90 இலட்சம் ரூபா வட்டியுடன் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment