Monday, December 26, 2011

டக்ளஸின் அடுத்த புலு டா! LLRC அறிக்கைக்கு எதிராக வழக்கு போடப்போறாராம்.

அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையி;ல் தனது கட்சி செயற்பாடுகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கண்டித்து வழக்கு தாக்கல் செய்ய போவதாக ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ரிஎம்விபி மற்றும் ஈபிடிபி அரசியல் தலைமைத்துவங்கள் அவர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், அவர்கள் அர்த்தமுள்ள நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின் இந்த பகுதியினால் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாக ஈபிடிபி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஈபிடிபி யின் செயற்பாடுகள் குறித்து தற்போதைய எம்பி மின்னல் ரங்கா வும் , பிபிசி வானொலியும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இவ்வாறான பல்வேறு தருணங்களில் டக்ளஸ் குறிப்பிட்ட கருத்துக்கள், அன்றில் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்று செல்லவுள்ளேன் என பல தடவைகளில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தபோதிலும், இதுவரை எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1 comments :

Anonymous ,  December 27, 2011 at 8:30 AM  

Please do not give any importance to this begger-murderer-lier-tamil enimy-capable to sell anything for a packet of peanuts. Tolally wast of space."purampoku"

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com