அண்மையில் வெளியான நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், எல்லா நாம்பனும் ஓடுது என்று வயித்து நாம்பனும் வாலைக்கிளப்பிக்கொண்டு ஓடிய கதையாக சிறி ரெலோ (சிறி-தமிழீழ விடுதலை இயக்கம்) எனும் கும்பலின் தலைவன் உதயராசாவும் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது தமிழ் மக்களின் கண்ணீருக்கு விடை தேடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஆணைக்குழு முன்னிலையில் தமது துயரங்களை கூறியிருந்தனர். ஆனால் அதற்கான விடை வழங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும் என்று ரெலோசிறி எனப்படும் கும்பலின் தலைவன் உதயராசா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு சில விடயங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவானது உரிய பரிந்துரைகளை வழங்கியுள்ள போதிலும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்த முக்கிய விடயங்களில் உரிய தீர்வினை ஆணைக்குழு வழங்கவில்லை. இது தமிழ் மக்களை ஏமாற்றத்துக்குள் தள்ளியுள்ளது எனவும் உதயராசா தெரிவித்துள்ளார்.
ஆம், தமிழ் மக்களுக்கு அவசியம் தேவைப்படுவது, உதயன் போன்ற இழிசெயல் பிரபலங்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதாகும். கருணா, பாரதி, மேஜர் சீலன் போன்றோர் மீது விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளபோதும், தன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படாமை கண்டு விடுதலைக் மகிழ்சியடைந்துள்ள உதயன் , அவ்வறிக்கையில் தான் செய்த சமூக விரோத செயல்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்படாமையால், தப்பிவிட்டேன் என்ற கணிப்பில் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளாரோ என கேட்கப்படுகின்றது.
உதயன்போன்ற கொள்ளையர்கள் தொடர்பாக விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிருப்தி அடைந்துள்ள மக்கள் கொள்ளையர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவதற்கென குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும் அக்குழுவின் தலைமையகம் இரணைமடுக்குளத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றனர்.
அவ்வாறு அமைக்கப்பட்டால் அத் தலைமையகத்தில் விசாரிக்கப்படுகின்றவர்களில் எத்தனைபேர் தண்டனைக்கு பயந்து இரணைமடுக்குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளப்போகின்றார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்.
சட்டவிரோத ஆட்கடத்தல் தொழில் புரிந்து வந்தவர் இந்த உதயன். மலேசியாவில் ஏகப்பட்ட இளைஞர்களிடம் பணத்தினை வாங்கி ஏமாற்றி விட்டு ஓடித்தப்புவதற்கு இடமில்லாமல் நின்றார். கடன்காரர்கள் தொல்லையால் டக்கிளசிடம் தஞ்சம் புகுந்த இவர் எவ்வாறு அரசியல்வாதியானர் என்பதெல்லாம் பெரும் கேலிக்கூத்து.
யுத்தம் உக்கிரமடைந்திருந்த காலத்தில் மேற்படி உதயன் வவுனியா கொழும்பு பிரதேசங்களில் பல்வேறு கொள்ளை , கொலை மற்றும் கப்பம் பெறுதல் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தாக ஊடகங்கள் தொடர்ச்சியாக குற்றச் சுமத்தி வந்தது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் இடைத்தங்கல் முகாம்களிலிருந்த மக்களை வெளியே எடுத்துவிடுவதற்காக லட்சக்கணக்கான பணத்தினை பெற்று உதயன் மோசடிகளை செய்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து வந்திருந்த தனது நண்பரான ஏஜென்டு ஒருவரை கொலைசெய்து அவரது பஜரோ வண்டியை விற்றுவிட்டு கணவரைத் தேடிப்போன அவர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுள்ளார்.
இவ்வாறு இவரின் இழிசெயல்களை அடுக்கி கொண்டே செல்லலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளத்துடிக்கும் இவரை கூட்டமைப்பு ஏற்க மறுத்துள்ளமைக்கான காரணமும் மேற்படி இழிசெயல்களே.
No comments:
Post a Comment